அரசுப்பள்ளி ஆசிரிய தம்பதி வீட்டில் ரூ.6 லட்சம்-150 பவுன் கொள்ளை
அரசுப்பள்ளி ஆசிரிய தம்பதி வீட்டில் புகுந்து ரூ.6 லட்சம், 150 பவுன் நகைகள் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
காளையார்கோவில்,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வசந்தம் நகரை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 45). இவர் கல்லிவயல் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஆரோக்கியரோசி (45). இவர் வெற்றியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார்.
இந்த கொள்ளை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு பால்பாண்டி, காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். சிவகங்கையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து கொள்ளையர்களின் கைரேகை எதுவும் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்தனர்.மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
அரசு பள்ளி ஆசிரிய தம்பதி வீட்டில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் காளையார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசுப்பள்ளி ஆசிரிய தம்பதி வீட்டில் புகுந்து ரூ.6 லட்சம், 150 பவுன் நகைகள் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
அரசு பள்ளி ஆசிரியர்
இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றனர். பின்னர் மாலையில் இருவரும் வீட்டுக்கு வந்தனர்.
ரூ.6 லட்சம், 150 பவுன் கொள்ளை
வீட்டை திறந்து உள்ளே சென்ற போது, வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டு பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் இருந்த ரூ.6 லட்சம் மற்றும் 150 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.ஆசிரிய தம்பதி வேலைக்கு சென்ற பிறகு அவர்களது வீடு புகுந்து மர்ம கும்பல் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.
போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை
அரசு பள்ளி ஆசிரிய தம்பதி வீட்டில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் காளையார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story