திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 நாட்களில் 1121 இடங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்து உலக சாதனை செய்யப்பட்டு உள்ளது. 4 உலக சாதனை அங்கீகார நிறுவனங்கள் மூலம் கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் பிரதாப்பிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 நாட்களில் 1121 இடங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்து உலக சாதனை செய்யப்பட்டு உள்ளது. 4 உலக சாதனை அங்கீகார நிறுவனங்கள் மூலம் கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் பிரதாப்பிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 நாட்களில் 1121 இடங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்து உலக சாதனை செய்யப்பட்டு உள்ளது. 4 உலக சாதனை அங்கீகார நிறுவனங்கள் மூலம் கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் பிரதாப்பிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது
1,121 பண்ணைக்குட்டைகள்
திருவண்ணாமலை மாவட்டம் கோடை காலத்தில் மிகுந்த வறட்சி, குடிநீர் பற்றாகுறை, உழவின்மை என பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் முதல்- அமைச்சரின் தொலைநோக்கு திட்டத்தின்படி மழைநீரினை தேக்கி வைத்து உபயோகிக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பணியாளர்களை ஈடுபடுத்தி 30 நாட்களில் பல்வேறு இடங்களில் அதிகமாக பண்ணைக்குட்டைகள் உருவாக்கி உலக சாதனை படைக்க மாவட்டம் முழுவதும் 1,121 பண்ணைக் குட்டைகள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.
இந்த திட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 541 ஊராட்சிகளில் அந்தந்த பகுதி விவசாயிகளின் வேளாண் நிலத்தில் அவர்களின் ஒப்புதலோடு 1121 பண்ணைக்குட்டைகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
30 நாட்களில் அதாவது கடந்த 10-ந் தேதிக்குள் 1121 பண்ணைக் குட்டைகள் உருவாக்க விவசாயிகளிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.
ஒவ்வொரு பண்ணைக்குட்டையும் 72 அடி நீளம், 36 அடி அகலம், 5 அடி ஆழம் கொண்டதாகும். இதில் தலா 3 லட்சத்து 64 லிட்டர் மழை நீரினை தேக்கி வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
உலக சாதனை
உலகிலேயே எந்த மாவட்டமும் செய்திடாத இந்த புதிய முயற்சியை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் ஏசியா பசிபிக் அம்பாசிடர் கார்த்திகேயன் ஜவஹர் மற்றும் சீனியர் அட்ஜூடிகேட்டர் அமீத் கே.ஹிங்கரோனி, ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் இந்தியன் அம்பாசிடர் ஏ.கே.செந்தில்குமார் மற்றும் சீனியர் அட்ஜூடிகேட்டர் சிவக்குமார், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அசோசியேட் எடிட்டர் ஜெகன்நாதன், மற்றும் ரெக்காட்ஸ் மேனேஜர் கார்த்திக் கனகராஜு, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சீனியர் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் பாலசுப்பிமணியன் ஆகியோர் நேரில் வந்து இந்த 1121 பண்ணைக் குளங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் 30 நாட்களில் பல்வேறு இடங்களில் அதிகமான பண்ணைக் குளங்கள் உருவாக்கிய உலக சாதனை என அங்கீகாரம் வழங்கினர்.
உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
உலக சாதனை அங்கீகார நிறுவனங்களால் மாவட்ட கலெக்டர் முருகேஷ் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பிரதாப் ஆகியோருக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்
இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1121 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இது 30 நாட்களில் அமைக்கப்பட்டு உள்ளது. 4 உலக சாதனை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடந்த 2 நாட்களாக இந்த பண்ணைக் குட்டைகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து அவர்கள் மூலம் உலக சாதனைக்கான சான்றிதழ்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 1121 பண்ணை குட்டைகளில் 1.25 சதவீத பண்ணை குட்டைகளை மட்டும் தள்ளுபடி செய்து மற்றவற்றை அங்கீகரித்து உள்ளனர்.
30 நாட்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணியில் 67 ஆயிரம் 100 வேலை திட்ட பணியாளர்கள் பணி செய்தனர். இந்த 1121 பண்ணைக்குட்டைகளால் சுமார் 60 கோடியே 68 லிட்டர் தண்ணீர் தேக்கம் அடையும். இந்த தண்ணீரினால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். இந்த பண்ணைக்குளங்கள் அமைப்பதற்காக பணியாற்றிய ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, வேளாண்மை துறை இணை இயக்குனர் முருகன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சிதம்பரம் உள்பட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story