சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 14 Sept 2021 11:48 PM IST (Updated: 14 Sept 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் வீரமணி(வயது 38). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் நடந்து 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்துவிட்டார். இவரது மகள்கள் மாமனார் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் முன்னூராங்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை 7 மாத கர்ப்பமாக்கிவிட்டு சாப்பாடு போடாமல் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார். விசாரணையில் அது உண்மை என ெதரிய வந்தது. பின்னர் அவர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தார். 

Next Story