மாவட்ட செய்திகள்

சிறுமி விஷம் குடித்து தற்கொலை + "||" + Suicide

சிறுமி விஷம் குடித்து தற்கொலை

சிறுமி விஷம் குடித்து தற்கொலை
சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தோகைமலை
கடவூர் அருகே வெள்ளப்பட்டி ஊராட்சி பாறைபட்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சினேகா (வயது 15). இவள் காணியாளம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தநிலையில் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் சினேகா அடிக்கடி செல்போனை வைத்துக்கொண்டு கேம் விளையாடி வந்ததாக தெரிகிறது. இதனால் சரிவர படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவளை பெற்றோர்கள் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சினேகா கடந்த 12-ந்தேதி வீட்டில் இருந்து பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சினேகாவை மீட்டு சிகிச்சைக்காக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சினேகா பரிதாபமாக இறந்தாள். இந்த தற்கொலை குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வள்ளியூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
3. தீக்குளித்து பெண் தற்கொலை
அலங்காநல்லூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
4. புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை கடன் தொல்லையால் விபரீதம்