கொத்தனார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


கொத்தனார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 15 Sept 2021 12:08 AM IST (Updated: 15 Sept 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

கொத்தனார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள கொடைக்கான்வலசை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் ராஜேந்திரன் (வயது 29). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரை ராமநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தனர் இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளத்தொடர்பு காரணமாக ராஜேந்திரன் அண்ணன் செல்வம் என்பவரின் மனைவி சத்தியா கள்ளக்காதலன் ஏர்வாடி முத்தரையர் நகரை சேர்ந்த தர்மராஜ் மற்றும் சிலர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலி சத்தியா மற்றும் தர்மராஜ் உடந்தையாக இருந்த புதுக்கோட்டை பொன்னமராவதி பகுதியை சேர்ந்த மணிவாசகம் ஆகிய 3 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மேற்கண்ட தர்மராஜின் தம்பி ஏர்வாடி முத்தரையர் நகரைச் சேர்ந்த முருகராஜ் மகன் வசீகரன் (22) என்பவரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த வசீகரனை நேற்று போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story