லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 15 Sept 2021 12:14 AM IST (Updated: 15 Sept 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

வேலூர்

வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). கொணவட்டத்தில் உள்ள மோட்டார்சைக்கிள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு 9.30 மணி அளவில் வேலை முடித்துக்கொண்டு வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். அண்ணாசாலை சாரதி மாளிகை அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சுரேஷ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விபத்து நடந்த சாலை முக்கிய சாலை என்பதால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story