மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு கத்திக்குத்து + "||" + Screaming at the teenager

வாலிபருக்கு கத்திக்குத்து

வாலிபருக்கு கத்திக்குத்து
ராமநாதபுரத்தில் மின்தகன சுடுகாட்டில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகன் தனுசு (வயது 19). இவரது தந்தை ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் எரிவாயு மின்தகன வளாகத்தில் பிணங்களை எரிக்கும் வேலை செய்து வந்த நிலையில் இறந்துவிட்டார். இதனால் வாலிபரின்  தாய்  ஜோதி தனது கணவரின் வேலையை தொடர்ந்து செய்து வந்துள்ளார். அவருக்கு உதவியாக மகன் தனுசு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்த இறந்த ஒருவரது உடல் கொண்டு வந்தபோது அங்கு வந்த ஒருவர் தகராறு செய்து உள்ளார்.. இதுகுறித்து தனுசு கண்டித்தபோது அருகில் கிடந்த முள்கம்பால் தாக்கியதுடன் கத்தியால் அவரை குத்தினாராம். இதில் படுகாயமடைந்த தனுசு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தாக்கிய நபரை தேடிவருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கந்திகுப்பம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
கந்திகுப்பம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
2. கோவையில் வாலிபருக்கு கத்திக்குத்து 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
கோவையில் வாலிபருக்கு கத்திக்குத்து 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
3. ராசிபுரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; தனியார் வங்கி ஊழியர் வீடு சூறை
ராசிபுரத்தில் வாலிபரை கத்தியால் குத்தியதால், தனியார் வங்கி ஊழியர் வீடு சூறையாடப்பட்டது.
4. வாலிபருக்கு கத்திக்குத்து
தகராறில் வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார்.