வாணியம்பாடி எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது


வாணியம்பாடி எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 15 Sept 2021 12:33 AM IST (Updated: 15 Sept 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது

வாணியம்பாடி

உள்ளாட்சி தேர்தல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. 

இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது, 

அதன்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் ஊராட்சி ஒன்றியங்கள், பஞ்சாயத்துகளுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தேர்தல் முடியும் வரையில் அமலில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி வாணியம்பாடி -ஜின்னா ரோட்டில் உள்ள வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை இன்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Next Story