தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 Sept 2021 12:44 AM IST (Updated: 15 Sept 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வள்ளியூர்:

வள்ளியூர் ஊற்றடி தெற்கு தெருவை சேர்ந்த முப்புடாதி மகன் பிரபு (வயது 36). சுமைதூக்கும் கூலி தொழிலாளி. இவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரபுவின் மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரபு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story