மேலும் 7 பேருக்கு கொரோனா


மேலும் 7 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 Sept 2021 12:47 AM IST (Updated: 15 Sept 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,855 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,235 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 77 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு நேற்று மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 547 ஆக உயர்ந்துள்ளது.

Next Story