திருச்சி மாநகரில் இன்று 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


திருச்சி மாநகரில் இன்று 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 15 Sept 2021 12:51 AM IST (Updated: 15 Sept 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

34 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி, செப்.15-
திருச்சி மாநகரில் இன்று (புதன்கிழமை) 34 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் நடைபெறும் இந்த முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் போடப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:- ஸ்ரீரங்கம் வடக்கு தேவி பள்ளி, ராகவேந்திரபுரம் ரெங்கா மெட்ரிக்பள்ளி, திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி, பாரதியார் பள்ளி, பிஷப்ஹீபர் நர்சரிபள்ளி, ஜீவாநகர் எல்லை மாரியம்மன் கோவில் வளாகம், நாதர்ஷா பள்ளிவாசல் வளாகம், மதுரம் மாநகராட்சி பள்ளி, வரகனேரி சவேரியார் பள்ளி, எடத்தெரு ஸ்ரீயதுகுல சங்கம் பள்ளி, மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி நூலகம், பொன்மலை மிலிட்டரி காலனி பஞ்சாயத்து பள்ளி, சுப்பிரமணியபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சங்கிலியாண்டபுரம் செவன்டாலர்ஸ் பள்ளி, காமராஜநகர் மாநகராட்சி பூங்கா, செம்பட்டு புதுத்தெரு நேசம் சென்டர், கே.கே.நகர் செயின்ட் ஆண்டனி பள்ளி, மேலப்புதூர் செயின்ட் ஆன்ஸ் பள்ளி, உய்யக்கொண்டான் திருமலை ஆர்.சி.பள்ளி, வயலூர்ரோடு பிஷப்ஹீபர் கல்லூரி, உறையூர் எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளி, காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி, காஜாபேட்டை, உறையூர் குறத்தெரு, ஆலத்தூர், தென்னூரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், மலைக்கோட்டை, வரகனேரி மேட்டுத்தெரு, மேலப்பஞ்சப்பூர், தென்னூர் பாரதிபுரம், உறையூர் சாலைரோடு, பஞ்சவர்ணசாமி கோவில் தெரு அரியமங்கலம் ஜெகநாதபுரம், மலைக்கோவில் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்கள். இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். இதேபோல் மாவட்டத்தில் புறநகர் பகுதியில் 124 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Next Story