புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
சங்கரன்கோவில் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு ஜாஹீர் உசேன் மேற்பார்வையில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் முத்துரெட்டியபட்டியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முத்துரெட்டியபட்டியை சேர்ந்த பெருமாள்சாமி (வயது 51) என்பவரது வீட்டின் மாட்டு தொழுவத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பெருமாள்சாமி கைது செய்யப்பட்டார்.
இதேபோல் முத்துரெட்டியபட்டியை சேர்ந்த சுப்புராஜ் (42) என்பவரது வீட்டின் அருகே ரூ.70 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் கைது பறிமுதல் செய்து சுப்புராஜை கைது செய்தனர்.
Related Tags :
Next Story