கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை


கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 15 Sept 2021 1:00 AM IST (Updated: 15 Sept 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு பெண் உடல் மிதப்பதாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் வீரர்கள் மற்றும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி அந்த உடலை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றில் இறந்து கிடந்தவர் சங்கரன்கோவில் குமரன் நகரை சேர்ந்த பூவனம் மனைவி பார்வதி (வயது 80) என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story