டாஸ்மாக் கடைகளில் திருடிய வாலிபர் கைது


டாஸ்மாக் கடைகளில் திருடிய வாலிபர் கைது
x

டாஸ்மாக் கடைகளில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

பாளையங்கோட்டை வி.எம். சத்திரம், முருகன் குறிச்சி, தச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மர்ம நபர்கள் புகுந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்றனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த இருதய ராஜ் மகன் அந்தோணி (வயது 27) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story