மக்காச்சோளம் சாகுபடி தீவிரம்


மக்காச்சோளம் சாகுபடி தீவிரம்
x
தினத்தந்தி 14 Sep 2021 7:34 PM GMT (Updated: 14 Sep 2021 7:34 PM GMT)

ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
மக்காச்சோளம் சாகுபடி 
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 
இவர்கள் கடந்த ஒரு மாதமாக நிலங்களை உழும் பணியில் ஈடுபட்டனா். தற்போது இந்த நிலங்கள் விதைகள் ஊன்றுவதற்கு தகுந்தாற் போல் மாறிவிட்டது. 
ஆதலால் இந்த நிலங்களில் விதைகள் ஊன்றி வருகின்றனர். ஆலங்குளம், பாறைப் பட்டி, கோபாலபுரம் புளியடிபட்டி, கீழாண்மறைநாடு, ஏ.லட்சுமிபுரம், கண்மாய்பட்டி, சுண்டங்குளம், கரிசல்குளம், கொங்கன் குளம், கல்லமநாயக்கர்பட்டி, குண்டாயிருப்பு, முத்துசாமிபுரம், எதிர்கோட்டை, இ.டி.ரெட்டியபட்டி, எட்டக்காபட்டி ஆகிய கிராமங்களில் விதைகள் ஊன்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
ரகங்கள் 
இதுகுறித்து விவசாயி அசோக்குமார் கூறியதாவது:- 
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் விதைகள் ஊன்றும் பணி நடந்து வருகிறது. 
நாங்கள் பேயர், அட்வானி டா, தான்யா, பயோனியர், ராசி சீட்ஸ், பிரபாத் சீட்ஸ் என பல்வேறு வகையான ரகங்களை  சாகுபடி செய்துள்ளோம். கிணற்று பாசனத்தில் ஒரு ஏக்கருக்கு 30 குவிண்டாலும், மானாவரியில் ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டாலும் மகசூல் பெறலாம். 
இவ்வாறு அவர் கூறினார்.  

Next Story