மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட மாணவர்கள் + "||" + Congratulations

விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட மாணவர்கள்

விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட மாணவர்கள்
விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட மாணவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டம் கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீகாந்த், அருண் ஆகிய இருவரும் பிளாஸ்டிக் மறுசுழற்சியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  மும்பை வரை 2,000 கிலோ மீட்டர் தொலைவு சைக்கிள்பயணம் மேற்கொண்டனர். இதன் மூலம் இவர்கள் சர்வதேச சாதனை பதிவு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 5,000 மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் கலெக்டர் மேகநாத ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கலெக்டர் மேகநாத ரெட்டி தொடர்ந்து மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
2. நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து
நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
3. மு.க.ஸ்டாலினுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்து
தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்து தெரிவித்து உள்ளது.