வேன் டிரைவர் மர்மச்சாவு


வேன் டிரைவர் மர்மச்சாவு
x
தினத்தந்தி 15 Sept 2021 2:05 AM IST (Updated: 15 Sept 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

வேன் டிரைவர் மர்மமான நிலையில் இறந்துகிடந்தார்.

மேலூர், 
மேலூர் அருகே கிடாரிப்பட்டி மாப்பாறையை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது24). வேன் டிரைவர். இவர் கிடாரிப் பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் சுந்தரபாண்டி மீது மோதியுள்ளது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தி சமரசமானதாக கூறப்படுகிறது. அதன் பிறகு வீட்டுக்கு சென்ற சுந்தரபாண்டிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுந்தரபாண்டி தாக்கப்பட்டு இருந்த தாக அவரது தாயார் பச்சையம்மாள் மேலவளவு போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே சுந்தரபாண்டியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சுந்தரபாண்டியின் உறவினர்கள் மேலூரில் தாலுகா அலுவலகம் எதிரே சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவல் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசம் செய்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story