மாவட்ட செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை + "||" + Newlywed commits suicide within 3 months of marriage

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
அறந்தாங்கி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்
அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயலை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ஜெயலட்சுமி(வயது 20). இவருக்கும், கடையாத்துபட்டியை சேர்ந்த கருப்பையா மகன் வினோத்துக்கும்(31) திருமணம் நடைபெற்றது. வினோத், அறந்தாங்கியில் உள்ள ஒரு டாக்டரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ஜெயலட்சுமிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
சம்பவத்தன்று வினோத்துக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், வீட்டில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்து இருவரையும் தனிக் குடித்தனம் வைத்துள்ளனர்.
தற்கொலை
இந்தநிலையில் கூத்தாடிவயலில் தங்கியிருந்த ஜெயலட்சுமியிடம், வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பிய வினோத் மனைவியிடம் வீட்டு சாவியை கேட்டுள்ளார். அப்போது ஜெயலட்சுமியின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த வினோத், செல்போனை பிடுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. தன்னை சந்தேகப்பட்டுதான் செல்போனை பிடுங்கிக் கொண்டதாக நினைத்த ஜெயலட்சுமி, கோபத்தில் தாய் வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார். ஜெயலட்சுமி தூக்கில் தொங்குவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.