மாவட்ட செய்திகள்

6½ பவுன் நகைகள் திருட்டு + "||" + gold theft in shop

6½ பவுன் நகைகள் திருட்டு

6½ பவுன் நகைகள் திருட்டு
மெலட்டூர் அருகே நகைக்கடை பூட்டை உடைத்து 6½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை பேலீசார் தேடி வருகிறார்கள்.
மெலட்டூர்;
மெலட்டூர் அருகே நகைக்கடை பூட்டை உடைத்து 6½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை பேலீசார் தேடி வருகிறார்கள். 
நகை திருட்டு
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள களஞ்சேரி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவர் திருக்கருகாவூர் அருகே உள்ள நாகலூர் கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தனசேகரன் கடையில் வியாபாரம் முடிந்த பின் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அவர் கடையை   திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது  கடையில் இருந்த 6½ பவுன் நகைகள் திருட்டுப்போய் இருந்தன. 
தடயங்கள்
இது குறித்து மெலட்டூர் போலீசாருக்கு தனசேகரன்  தகவல் அளித்தார். இதன்பேரில் மெலட்டூர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று  திருட்டு நடந்த நகைக்கடையை நேரில் பார்வையிட்டு தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். மேலும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை பிடிக்க அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.