தி.மு.க. நிா்வாகியை கொல்ல முயன்ற வாலிபர் கைது


தி.மு.க. நிா்வாகியை கொல்ல முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Sept 2021 2:32 AM IST (Updated: 15 Sept 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. நிா்வாகியை கொல்ல முயன்ற வாலிபர் கைது ெசய்யப்பட்டாா்

அன்னவாசல்
அன்னவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்த பிச்சைமுத்து மகன் ஜான்பாண்டியன் (வயது 23). சென்டிரிங் தொழிலாளியான இவர்  அன்னவாசலில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக அன்னவாசல் தி.மு.க. நகர செயலாளர் அக்பர்அலி (61) அங்கு வந்தார். அப்போது அக்பர்அலிக்கும், ஜான்பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜான்பாண்டியன் கையில் வைத்திருந்த கத்தியால் அக்பர் அலியை தாக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில், அக்பர்அலிக்கு கழுத்து மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அன்னவாசல் போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்பாண்டியனை கைது செய்து இலுப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருமயம் கிளைச்சிறையில் அடைத்தனர்.


Next Story