கர்நாடகத்தில் 17-ந் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடகத்தில் வருகிற 17-ந்தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் வருகிற 17-ந் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொள்ளும்படி முதல்-மந்திரி உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "வருகிற 17-ந் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினேன். இவற்றுக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளேன். அன்றைய தினம் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
மைசூருவில் இந்து கோவிலை இடித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காரணம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளோம். கோவில்களை அகற்றுவதில் அதிகாரிகள் அவசரகதியில் முடிவு எடுக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மந்திரிசபை கூட்டத்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஆழமாக பரிசீலனை செய்ய இருக்கிறோம். இதுகுறித்து சட்டசபையில் அனைத்து தகவல்களையும் கூறுவேன்" என்றார்.
Related Tags :
Next Story