மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி நிலம் மீட்பு


மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி நிலம் மீட்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 10:02 PM GMT (Updated: 14 Sep 2021 10:02 PM GMT)

திற்பரப்பு மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை கோவில் அதிகாரிகள் மீட்டனர்.

சுசீந்திரம், 
திற்பரப்பு மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை கோவில் அதிகாரிகள் மீட்டனர்.
ஆக்கிரமிப்பு
குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்களும், பல கோடி ரூபாய் மதிப்பிலான நஞ்சை, புஞ்சை மற்றும் நிலங்களும் உள்ளன. இதில் பெரும்பாலான நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
 ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை தமிழக அரசு விரைவில் மீட்டெடுக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்ததை தொடர்ந்து குமரி மாவட்ட கோவில் நிர்வாகம் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுப்பதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிலம் மீட்பு
அதன் அடிப்படையில் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட திற்பரப்பு மகாதேவர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான 81 சென்ட் இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தது தெரிய வந்தது. 
அதைத்தொடர்ந்து குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், ஸ்ரீகாரியம் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், கோவில் பணியாளர்கள், போலீசார் அந்த நிலத்தை மீட்டனர். அந்த இடத்தில் 110 சிறிய ரப்பர் மரங்கள், 50 முதிர்ந்த ரப்பர் மரங்கள், 13 கமுகு மரங்கள், 2 தேக்கு மரங்கள், 2 தென்னைமரம் ஆகியவை இருந்தன. அந்த மரங்களை சுற்றி முள்வேலி அமைத்து இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story