சேலம் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு தொற்று-கொரோனாவுக்கு 3 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 3 பேர் பலியானார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 55 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சி பகுதியில் 18 பேர், எடப்பாடி, கொங்கணாபுரம், ஆத்தூர், தலைவாசல் வீரபாண்டியில் தலா ஒருவர், சங்ககிரி, கொளத்தூரில் தலா 2 பேர், நங்கவள்ளி, தாரமங்கலம், மேட்டூர், அயோத்தியாப்பட்டணத்தில் தலா 3 பேர், மேச்சேரியில் 7 பேர் பாதிக்கப்பட்டனர். நாமக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வந்த 6 பேர் உள்பட மொத்தம் 52 பேர் தொற்றால் பாதித்து உள்ளனர். அதன்படி மாவட்டத்தில் இதுவரை 97 ஆயிரத்து 277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று 52 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 94 ஆயிரத்து 703 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று 3 பேர் பலியானார்கள். அதன்படி இதுவரை கொரோனா தொற்றால் மாவட்டத்தில் 1,649 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story