மாவட்ட செய்திகள்

சேலத்தில் வாலிபர் கொலையில் மேலும் ஒரு சிறுவன் கைது + "||" + arrest

சேலத்தில் வாலிபர் கொலையில் மேலும் ஒரு சிறுவன் கைது

சேலத்தில் வாலிபர் கொலையில் மேலும் ஒரு சிறுவன் கைது
சேலத்தில் வாலிபர் கொலையில் மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டான்.
சேலம்:
சேலத்தில் வாலிபர் கொலையில் மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டான்.
வாலிபர் கொலை
சேலம் கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த வினோத்குமார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து இந்த கொலை குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே அ.தி.மு.க. நிர்வாகி பழனிசாமி மற்றும் 18 வயதுடைய சிறுவன் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுவன் கைது
போலீஸ் விசாரணையில் இந்த கொலை பழிக்குபழியாகவே நடந்தது என்பது தெரியவந்தது. மேலும் இந்த கொலையில் தொடர்புடைய கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சிறுவன் ஒருவனை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் அந்த சிறுவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த சிறுவன் உள்பட இந்த கொலையில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருசிலர் மீது சில வழக்குகள் இருப்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.