மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே லாரி தீப்பிடித்து எரிந்ததில் இரும்பு பொருட்கள் சேதம் + "||" + Near Tiruvallur Damage to ferrous materials in truck fire

திருவள்ளூர் அருகே லாரி தீப்பிடித்து எரிந்ததில் இரும்பு பொருட்கள் சேதம்

திருவள்ளூர் அருகே லாரி தீப்பிடித்து எரிந்ததில் இரும்பு பொருட்கள் சேதம்
திருவள்ளூர் அருகே லாரி தீப்பிடித்து எரிந்ததில் இரும்பு தளவாட பொருட்கள் சேதம் அடைந்தது.
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா குன்னத்தூர் காலனியை சேர்ந்த அருண்குமார் (வயது 31) என்பவர் ஒரு லாரியில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள 12 இரும்பினாலான பொருட்களை ஏற்றிக்கொண்டு ராணிப்பேட்டை எடுத்து சொல்ல வந்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவர் லாரியில் இரும்பு பொருட்களை ஏற்றிவிட்டு அதனை மேல்நல்லாத்தூர் அருகே சாலையில் நிறுத்தி விட்டு சென்றார்.

அப்போது அந்த லாரியில் எதிர்பாராதவிதமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. லாரியில் இருந்த ரூ.37 லட்சம் மதிப்புள்ள இரும்பு தளவாட பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து அருண்குமார் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.