திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 66 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 66 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 15 Sept 2021 5:55 AM IST (Updated: 15 Sept 2021 5:55 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 214 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 708 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1805 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால் 2 பேர் இறந்துள்ளனர்.

Next Story