மாவட்ட செய்திகள்

சரள் மண் கடத்தியவர் கைது + "||" + Gravel smuggler arrested

சரள் மண் கடத்தியவர் கைது

சரள் மண் கடத்தியவர் கைது
தூத்துக்குடி அருகே சரள் மண் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, மாதாநகர் சந்திப்பு பகுதியில் ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தார். அந்த லாரியில் முறையான ஆவணங்கள் இன்றி, 22 டன் சரள் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் லாரி டிரைவர் பெருமாள் (வயது 35) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து லாரி மற்றும் 22 டன் சரள் மண்ணையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
நெல்லையில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.