நீட்டுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

நீட்டுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sep 2021 3:11 PM GMT (Updated: 15 Sep 2021 3:11 PM GMT)

நீட்டுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி

தமிழக சட்டசபையில் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் இப்ராஹிம் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

அதன் பின்னர் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் இப்ராஹிம் நிருபர்களிடம் கூறும்போது, மத்திய அரசு தேசிய நலனுக்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. 

இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை கண்டிக்கிறோம். நீட் தேர்வு தொடர்பான மாணவர்கள் இறப்புக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்க வேண்டும். தமிழக மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளும் திறமை உள்ளவர்கள். எந்த மதத்தில் தீவிரவாதிகள் இருந்தாலும் ஒடுக்க வேண்டும் என்றார்.

Next Story