மாவட்ட செய்திகள்

நீலகிரியில் பிளஸ்-1 துணை தேர்வு தொடங்கியது + "||" + Plus1 sub selection started in Nilgiris

நீலகிரியில் பிளஸ்-1 துணை தேர்வு தொடங்கியது

நீலகிரியில் பிளஸ்-1 துணை தேர்வு தொடங்கியது
நீலகிரியில் பிளஸ்1 துணை தேர்வு தொடங்கியது
ஊட்டி

நீலகிரியில் பிளஸ்-1 துணைத் தேர்வு தொடங்கியது. முதல் நாளில் 25 பேர் எழுதினர்.

பிளஸ்-1 துணைத்தேர்வு

நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பிளஸ்-1 துணைத்தேர்வு தொடங்கியது.

 நீலகிரியில் குன்னூர் கல்வி மாவட்டத்தில் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடந்தது. தேர்வு எழுத வந்த தேர்வர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது மேலும் தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அவர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னர் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளிவிட்டு மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். நேற்று தமிழ் பாடத் தேர்வு நடந்தது. தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை 3 மணி நேரம் நடந்தது. 

குன்னூர் கல்வி மாவட்டத்தில் விண்ணப்பித்த 16 பேரில் 14 பேர் தேர்வு எழுதினர். அந்த மையத்தை குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  கூடலூர் கல்வி மாவட்டத்தில் 10 பேர் தமிழ் பாடம், ஒருவர் மலையாள பாட தேர்வு எழுதினர். மொத்தம் 25 பேர் பிளஸ்-1 துணைத்தேர்வு எழுதினர். வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

2 மையங்கள் அமைப்பு

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் எழுதலாம். தேர்வில் எடுக்கும் மதிப்பெண் இறுதியானது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இன்று (வியாழக்கிழமை) எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு தொடங்குகிறது. ஊட்டி, கூடலூரில் தலா ஒரு மையம் என 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.