பெண் போலீஸ் அதிகாரி கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்


பெண் போலீஸ் அதிகாரி கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2021 8:42 PM IST (Updated: 15 Sept 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

பெண் போலீஸ் அதிகாரி கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

ஊட்டி

டெல்லியில் பெண் போலீஸ் அதிகாரியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை கண்டித்தும், அதற்கு நீதி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் ஊட்டி நகர அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் முகமது ரபீக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. டெல்லியில் பெண் போலீஸ் அதிகாரி கொலைக்கு நீதி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் பலர் கலந்துகொண்டனர்.

Next Story