நீலகிரியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி
நீலகிரியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி
ஊட்டி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் வங்கியாளர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி 3 சுய உதவி குழுக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் கடன் உதவிகள், குழுக்களுக்கு அதிக கடன் இணைப்பு பெற்றுத்தர பணிபுரிந்த சமூக ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு 2020-2021-ம் ஆண்டில் அதிக வங்கி கடன் வழங்கிய நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு (பந்தலூர் கிளை, முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், கனரா வங்கிக்கு (சேரம்பாடி கிளை) 2-ம் பரிசு ரூ.10,000, தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி (நெக்கிகம்பை) 3-ம் பரிசு ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை, சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுவுக்கு தீர்வு காணப்பட்டு மாணவி மகாலட்சுமிக்கு ரூ.2.80 லட்சம் கல்வி கடனுதவி வழங்கப்பட்டது. கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர் ஜாகீர் உசேன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜா, மற்றும் அலுவலர்கள், வங்கியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story