அமைச்சர் கீதாஜீவன் குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்கு
தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் குறித்து அவதூறு பரப்பியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராகவும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் கீதாஜீவன். இவரைப் பற்றி அவதூறாக, சில பிரிவு மக்களிடையே பகையை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒருவர் வாட்ஸ்அப்பில் தகவல்களை அனுப்பி வந்தாராம்.
இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்கு பதிவு செய்து அவதூறு பரப்பிய நபரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story