மூலனூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.10க்கு விற்பனை


மூலனூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.10க்கு விற்பனை
x
தினத்தந்தி 15 Sep 2021 4:06 PM GMT (Updated: 15 Sep 2021 4:06 PM GMT)

மூலனூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.10க்கு விற்பனை

மூலனூர், 
 மூலனூர் பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தையில் வாரந்தோறும் பிரதிவாரம் புதன்கிழமை அன்று காய்கறி சந்தை நடைபெறும். இந்த சந்தையில் மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளான கிளாங்குண்டல், பெரமியம், காளிபாளையம், தூரம்பாடி, கன்னிவாடி உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் இருந்து பயிரிடப்பட்ட காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம் மேலும் இந்த சந்தையில் மளிகை பொருட்கள் விவசாய கருவிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படும் தற்போது இந்த வாரம் வெங்காயம் வரத்து அதிகமானதால் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது நேற்று மூலனூர் வார சந்தையில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1-க்கு:-தக்காளி ரூ.10, வெங்காயம் ரூ.30, கேரட் ரூ.100, பீன்ஸ் ரூ.60, பீட்ரூட் ரூ.60, கத்திரிக்காய் ரூ.40, முட்டைகோஸ் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.30, பீர்க்கங்காய் ரூ.40 பாகற்காய் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Next Story