திருப்பூரில் தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருப்பூரில் தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருப்பூர்,
திருப்பூரில் தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
அண்ணா பிறந்தநாள் விழா
திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் ரெயில் நிலையம் முன் நடைபெற்றது. அண்ணா சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஈஸ்வரமூர்த்தி, செந்தூர் முத்து, ராமசாமி, பகுதி செயலாளர்கள் ராமதாஸ், உசேன், அய்யப்பன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ், துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், இளைஞரணி மாநகர அமைப்பாளர் செந்தில்குமார், நிர்வாகி திலகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பல்லடம்
பல்லடம் நகர தி.மு.க. சார்பில் அண்ணா உருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், மற்றும் நிர்வாகிகள் ஜெகதீஸ், ராஜசேகர், நடராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த அனைத்து கிராமங்களிலும் தி.மு.க.கொடியை ஏற்றி, அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. கணபதி பாளையம் ஊராட்சி வலசு பாளையத்தில், ஒன்றிய பொறுப்பாளர் சோமசுந்தரம், 100 குடும்பத்தினருக்கு, நலத்திட்ட உதவியாக, வேட்டி, சேலைகள் வழங்கினார். இதில், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், பொறுப்புக் குழு உறுப்பினர்கள்ரத்தினசாமி, தங்கவேல், துரைசாமி, மற்றும் முத்துக்குமார், கதிரேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அனைத்து கிராமங்களிலும், கொடியை ஏற்றி, அண்ணா உருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.பின்னர் பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில், அண்ணா உருவப்படத்திற்கு, ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி, பொறியாளர் அணி சிற்பி செல்வராஜ், மற்றும், நிர்வாகிகள், சுப்பிரமணியம், சாமியப்பன், ராஜேஸ்வரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேவூர்
சேவூர் ரவுண்டானா பகுதியில் சேவூர் கிளை தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. சேவூர் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் க.பால்ராஜ் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் மு.பாரதி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பொறுப்பு குழு உறுப்பினர்கள் சு.உதயகுமார், ஜி.கே.கந்தசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மு.ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ப.ரவிச்சந்திரன், வடக்கு தி.மு.க. கிளைசெயலாளர் அப்துல் சலாம், மற்றும் ஒன்றிய, கிளை, மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேலம்பாளையம்
திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதி தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பகுதி செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ்.மணி முன்னிலை வகித்தார். விழாவையொட்டி அனுப்பர்பாளையம்புதூரில் உள்ள பகுதி கட்சி அலுவலகத்தில் அண்ணா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். இதில் வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருகேசன், சிறுபான்மை பிரிவு நல உரிமை துணை அமைப்பாளர் ஜான்வல்தாரீஸ், வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் சிட்டி வெங்கடாச்சலம், வட்ட செயலாளர்கள் அய்யம்பெருமாள், சாமிநாதன், ஸ்ரீதர், குட்டிகுமார், ரத்தினசாமி, சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story