அனுப்பர்பாளையத்தில் ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்தை பறித்து சென்ற சம்பவத்தில் 3 நாட்களில் வாலிபரை பிடித்து பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
அனுப்பர்பாளையத்தில் ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்தை பறித்து சென்ற சம்பவத்தில் 3 நாட்களில் வாலிபரை பிடித்து பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர்,
அனுப்பர்பாளையத்தில் ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்தை பறித்து சென்ற சம்பவத்தில் 3 நாட்களில் வாலிபரை பிடித்து பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் வனிதா பாராட்டி சான்றிதழ், ரொக்கப்பணம் வழங்கினார்.
ரூ.11 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல்
திருப்பூர் குருவாயூரப்பன் நகர் முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவர் பனியன் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவருடைய மனைவி தேன்மொழி (வயது 36). கடந்த 9-ந் தேதி ராமநாதன் வீட்டுமனை வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் நெருப்பெரிச்சலில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஆவணங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இருவரும் கேத்தம்பாளையம் ஜே.வி.டேப்ஸ் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பணப்பையை தேன்மொழி கையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்தார்.
அப்போது பின்னால் வந்த வாலிபர் பணப்பையை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பணப்பறிப்பு ஆசாமியை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ரவி கண்காணிப்பில் வடக்கு உதவி கமிஷனர் மகேந்திரன் மேற்பார்வையில் அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினருக்கு பாராட்டு
தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அத்தாணி கள்ளிப்பட்டியை சேர்ந்த அருண்குமார் (23) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மீதம் உள்ள பணத்தை நண்பர்களுடன் வெளியூர் சென்று செலவு செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த மோட்டார் சைக்கிளை ஈரோட்டில் திருடியது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், ஒரு கொலைமிரட்டல் வழக்கும் உள்ளது.
சம்பவம் நடந்த 3 நாட்களுக்குள் பணப்பறிப்பு ஆசாமியை கைது செய்து பணத்தை மீட்ட தனிப்படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் சென்னகேசவன், ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், தங்கவேல், ஏட்டு சங்கரநாராயணன், முதல்நிலை காவலர்கள் ரமேஷ்குமார், ராஜசேகர், மயில்சாமி, தீபக், காவலர்கள் சபிக்ராஜா, மணிகண்டன், பிரபாகரன், குகன்நாதன், வினோத்குமார் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருப்பூர் மாநகராட்சி ஆணையரகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் வனிதா, சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினருக்கு பாராட்டு சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் மீட்கப்பட்ட ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்தை ராமநாதன், தேன்மொழி ஆகியோரிடம் கமிஷனர் ஒப்படைத்தார். துணை கமிஷனர்கள் ரவி, அரவிந்த் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story