தர்மபுரி உள்ளிட்ட 4 இடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி உள்ளிட்ட 4 இடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கோவிந்தன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், பொருளாளர் சுப்பிரமணியன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் ஒன்றிய பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.
இதேபோன்று நல்லம்பள்ளியில் ஒன்றிய தலைவர் ராமகவுண்டர் தலைமையிலும், பாலக்கோட்டில் ஒன்றிய தலைவர் சுப்பிரமணி தலைமையிலும், மொரப்பூரில் ஒன்றிய தலைவர் சிவராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்பநல நிதி ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story