நல்லம்பள்ளி சிமெண்டு கடை உரிமையாளர் தற்கொலை


நல்லம்பள்ளி சிமெண்டு கடை உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Sept 2021 10:05 PM IST (Updated: 15 Sept 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளியில் சிமெண்டு கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்தவர் நேரு (வயது47). இவர் சிமெண்டு கடை நடத்தி வந்தார். இவர் தனது பழைய இரும்பு பொருட்கள் வைத்துள்ள குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story