பெரியகுளத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


பெரியகுளத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 15 Sept 2021 10:15 PM IST (Updated: 15 Sept 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

அண்ணா பிறந்தநாளையொட்டி பெரியகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரியகுளம்:
அண்ணா பிறந்தநாளையொட்டி பெரியகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
அண்ணா பிறந்தநாள்
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா பெரியகுளத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பெரியகுளம் வடகரை பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், ரவீந்திரநாத் எம்.பி., மாவட்ட செயலாளர் சையதுகான், ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், நகர துணை செயலாளர் அப்துல் சமது, மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் நாராயணன், நகர கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அன்பு, அரசு வக்கீல் வெள்ளைச்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
தி.மு.க.வினர் மரியாதை
இதேபோல் தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், சரவணக்குமார் எம்.எல்.ஏ., நகர செயலாளர்கள் முரளி (பெரியகுளம்), பாலமுருகன் (தேனி), மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் செல்லபாண்டியன், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி தலைவர் முருகாயி காமராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 
அ.ம.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர செயலாளர் சந்தனம், ஒன்றிய செயலாளர் குள்ளப்புரம் கணேசன், மாவட்ட மாணவரணி செயலாளர் வடுகபட்டி செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியவீரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story