தேனியில் மனித சங்கிலி போராட்டம்
தேனியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தேனி:
சட்டவிரோத நடவடிக்கைகள் தடை சட்டத்தின் (ஊபா) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட 15 சமூக செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யக்கோரி, பீமா கோரேகான் சதிவழக்கில் சிறைபடுத்தப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில் தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது.
அதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், தமிழ்ப்புலிகள் கட்சி மாநில நிர்வாகி தலித்ராயன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ், வனவேங்கைகள் கட்சி மாவட்ட செயலாளர் பூமிநாதன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இவர்கள் போராட்டத்தின்போது சாலையின் ஓரத்தில் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.
அப்போது, 15 சமூக செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும், ‘ஊபா' சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) கொடுக்கப்பட்ட வரம்பற்ற அதிகாரத்தை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story