மாவட்ட செய்திகள்

மின்துறை ஊழியரிடம் ரூ.1.50 லட்சம் திருட்டு + "||" + 1.50 lakh theft from power sector employees

மின்துறை ஊழியரிடம் ரூ.1.50 லட்சம் திருட்டு

மின்துறை ஊழியரிடம் ரூ.1.50 லட்சம் திருட்டு
மின்துறை ஊழியரிடம் ரூ.1.50 லட்சம் திருட்டு
பாகூர், செப்.
கிருமாம்பாக்கத்தை அடுத்த கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ருத்ரகுமார் (வயது 50). மின்துறை ஊழியர். இவர் நேற்று கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று, தனது மகளின் கல்வி செலவுக்காக ரூ.1.50 லட்சம் பணத்தை எடுத்தார். அந்த பணத்தை தனது மொபட்டின் பெட்டியில் வைத்து பூட்டினார். 
பின்னர் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றார். அந்த கடையின் முன் மொபட்டை நிறுத்தி இருந்தார். கடைக்கு சென்ற ருத்ரகுமார் சிறிது நேரம் கழித்து வந்தார். அப்போது மொபட் பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.1.50 லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ருத்ரகுமார், வங்கியில் இருந்து பணம் எடுத்ததை நோட்டமிட்ட மர்மநபர் அவரை பின் தொடர்ந்து சென்று, மொபட் பெட்டியில் இருந்த பணத்தை நைசாக திருடிச் சென்றுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.