குருபரப்பள்ளியில் கியாஸ் கசிவால் கிரானைட் நிறுவன தொழிலாளி உடல் கருகி சாவு
குருபரப்பள்ளியில் கியாஸ் கசிவால் கிரானைட் நிறுவன தொழிலாளி உடல் கருகி இறந்தார்.
குருபரப்பள்ளி,
குருபரப்பள்ளியில் கியாஸ் கசிவால் கிரானைட் நிறுவன தொழிலாளி உடல் கருகி இறந்தார்.
தொழிலாளிகள்
பீகார் மாநிலம், தர்பங்கா அடுத்த தவுரதா பகுதியை சேர்ந்தவர் மணீஷ்குமார் (வயது20). அதே பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (29). இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் தங்கி அங்குள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலைபார்த்து வந்தனர். சம்பவத்தன்று அவர்கள் 2 பேரும் வேலை முடிந்த பின்னர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டிற்குள் சென்று மின்விளக்கை போட்டவுடன் திடீரென அவர்கள் மீது தீப்பிடித்து கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 பேரும் சத்தம் போட்டனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து தீயை அணைத்து 2 பேரையும் மீட்டுனர். இந்த தீ விபத்தில் உடல் கருகிய 2 பேரும் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பரிதாப சாவு
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு மணீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அஜித்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தீ விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story