வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதல் நாளில் 124 பேர் வேட்புமனு தாக்கல்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதல் நாளான நேற்று 124 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேலூர்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதல் நாளான நேற்று 124 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
உள்ளாட்சி தேர்தல்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு முன் ஏற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் பகுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுதாக்கல் செய்யலாம் என்றும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான வின்சென்ட்ரமேஷ்பாபு செய்திருந்தார்.
முதல்நாளான நேற்று பலர் ஆர்வமுடன் வந்து விண்ணப்ப படிவத்தை வாங்கிச் சென்றனர். யாரும் வேட்புமனுதாக்கல் செய்யவில்லை.
56 பேர் வேட்பு மனு தாக்கல்
வேலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 56 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதில் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 208 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கல் பகவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
முதல் நாளான நேற்று ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 32 பேர் என மொத்தம் 34 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு யாரும் நேற்று மனுதாக்கல் செய்யவில்லை.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்நாளான நேற்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட 2 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 32 பேரும் ஆக மொத்தம் 34 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மாவட்ட குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
முதல் நாளான நேற்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 4 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 20 பேரும் என மொத்தம் 124 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story