மலைக்கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை
கொடைக்கானல் அருகே மலைக்கிராமத்துக்குள் காட்டு யானை புகுந்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கணேசபுரம், புலியூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று வலம் வருகிறது. இது, அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன், பொதுமக்களையும் அச்சுறுத்திய வண்ணம் உள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில், பேத்துப்பாறை கிராமத்துக்குள் காட்டு யானை திடீரென புகுந்து விட்டது. இதனை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்தனர். சிறிதுநேரம் அந்த யானை அங்கேயே உலா வந்தது. இதனையடுத்து பொதுமக்கள் ஒன்று கூடி சத்தம் போட்டனர்.
இதனால் யானை அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விட்டது.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story