திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குடியாத்தத்தில் திருமணமானஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் திருமணமானஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் தாழையாத்தம் பெரியார்நகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எழிலரசன். இவருடைய மகள் அபிநயா என்கிற அன்பரசி (வயது 22). டிப்ளமோ படித்துள்ளார்.
கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் பஜனைகோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவருடைய மகன் ராமராஜன் (31). சென்னை அப்பல்லோ மருத்துவமனை பார்மசியில் வேலை செய்து வருகிறார்.
அபிநயாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அதற்கு தற்போது திருமணம் வேண்டாம் என அபிநயா மறுத்துள்ளார். இதற்கிடையில் அபிநயாவை, ராமராஜனுக்கு கடந்த 8-ந் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இரண்டு நாட்களுக்கு முன்பு அபிநயா தனது கணவர் ராமராஜனுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு விருந்துக்கு வந்துள்ளார். நேற்று காலையில் அபிநயாவின் பெற்றோர்கள் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர். ராமராஜன் வீட்டில்உள்ள அறையில் இருந்துள்ளார். அந்த அறையை அபிநயா வெளிப்புறமாக பூட்டிவிட்டு, வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்.
சிறிது நேரத்தில் கடைக்கு சென்றிருந்த அபிநயாவின் பெற்றோர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அபிநயா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ராமராஜன் இருந்த அறையின் கதவைத் திறந்து ராமராஜன் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அபிநயாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி ஒரு வாரமே ஆவதால் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் இளம்பெண் அபிநயா தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணம் நடைபெற்று ஒரு வார காலத்திலேயே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story