அரசு பஸ்சை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
அரசு பஸ்சை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
தண்டராம்படடு
தானிப்பாடி அருகே சேஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக கூட்டு குடிநீர் திட்ட மின்மோட்டார் பழுதடைந்து விட்டதால் குடிநீர் சப்ளை இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ஊராட்சி நி்ாவாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தானிப்பாடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story