கணவர் பிரிந்து சென்றதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


கணவர் பிரிந்து சென்றதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 16 Sept 2021 12:48 AM IST (Updated: 16 Sept 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

கணவர் பிரிந்து சென்றதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

புதுக்கோட்டை:
பெண் தற்கொலை 
புதுக்கோட்டை கடையக்குடி பகுதியை சேர்ந்த நாச்சியப்பனின் மனைவி தமிழரசி (வயது26). இவருக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்றார். தமிழரசிக்கு குழந்தைகள் இல்லை. தமிழரசி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தமிழரசி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 4 ஆண்டுகளில் பெண் இறந்ததால் புதுக்கோட்டை உதவி கலெக்டர் அபிநயாவும் விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story