பரமக்குடியில் பிளஸ்-2 மாணவருக்கு கொரோனா


பரமக்குடியில் பிளஸ்-2 மாணவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 Sept 2021 12:50 AM IST (Updated: 16 Sept 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் பிளஸ்-2 மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பரமக்குடி,

பரமக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 9 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 267 மாணவர்கள் அந்த பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு படிக்கும் பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கு கடந்த 2 தினங்களாக தொடர் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன.
இந்நிலையில் அந்த மாணவனுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த வகுப்புக்கு சென்று பாடம் நடத்திய 4 ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் 15 பேருக்கு ெகாரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, தொற்று இல்லை என தெரியவந்தால் அந்த மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று கூறி அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு அந்த வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. மற்ற வகுப்புகள் வழக்கம் போல் நடந்து வருகின்றன.

Next Story