தபால் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தபால் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Sept 2021 12:50 AM IST (Updated: 16 Sept 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

தபால் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய தபால் ஊழியர் சங்கம், தேசிய தபால் ஊழியர் சங்கம், கிராமிய தபால் ஊழியர் சங்கம் ஆகியவை சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய தபால் ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் தபால் நிலையங்களில் வாடிக்கையாளர்களின் கணக்கு தொடங்குவதை அதிகரிக்க இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும், மிரட்டல் விடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தபால் நிலையங்களில் எழுத்தர் பற்றாக்குறையை நீக்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தபால்காரர்கள் மற்றும் தபால் ஊழியர் சங்கத்தை சோந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Next Story