மூதாட்டியிடம் நூதனமுறையில் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நூதனமுறையில் நகை பறிப்பு
சிவகாசி
சிவகாசி அருகே நாரணாபுரம் ரோட்டில் உள்ள முனீஸ்வரன் காலனியை சேர்ந்தவர் அனந்தப்பன் மனைவி கஸ்தூரி(வயது 65). இவரிடம் சம்பவத்தன்று 2 வாலிபர்கள் முதியோர் உதவித்தொகை பெற்று தருவதாக கூறி சிவகாசி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு வங்கிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த மூதாட்டியிடம் காதில் அணிந்துள்ள தோடை கழற்றில் பையில் வைத்துக்கொள்ளும்படி கூறி உள்ளனர். பின்னர் மூதாட்டி காதில் இருந்த 4 கிராம் எடை உள்ள தங்கதோட்டை கழற்றி பையில் போடுவதுபோல் நடித்து அந்த தங்கதோட்டுடன் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து மூதாட்டி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் 4 கிராம் நகையுடன் தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story