மல்லிகை கிலோ ரூ.900-க்கு விற்பனை
தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீரென உயர்ந்து மல்லிகை கிலோ ரூ.900-க்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி,
தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீரென உயர்ந்து மல்லிகை கிலோ ரூ.900-க்கு விற்பனையானது.
தோவாளை மார்க்கெட்
தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன.
இந்த பூக்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் அனுப்பப்படுகிறது. பண்டிகை, திருவிழா மற்றும் கோவில் விழா காலங்களில் பூக்கள் விலை மிக உயர்ந்தும், மற்ற நாட்களில் விலை குறைந்தும் காணப்படும்.
பூக்கள் விலை உயர்வு
இந்தநிலையில் நேற்று தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் ரூ.400-க்கு விற்பனையான மல்லிகை ரூ.500 உயர்ந்து ரூ.900-க்கும், ரூ.250-க்கும் விற்பனையான பிச்சி ரூ.350-க்கும், சம்பங்கி ஒரு கிலோ ரூ.150-க்கும் விற்பனையானது.
மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை வருமாறு:-
அரளி ரூ.60, முல்லை ரூ.300, வாடாமல்லி ரூ.50, தாமரை(100 எண்ணம்) ரூ.300, கோழிப்பூ ரூ.60, துளசி ரூ.20, பச்சை (ஒரு கட்டு) ரூ.6, ரோஸ் (100 எண்ணம்) ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.70, மஞ்சள் கிரேந்தி ரூ.40, சிவப்பு கேந்தி ரூ.50, சிவந்தி மஞ்சள் ரூ.100, சிவந்தி வெள்ளை ரூ.120, கொழுந்து ரூ.70, மரிக்கொழுந்து ரூ.80 என விற்பனையானது.
Related Tags :
Next Story